திருச்செங்கோடு (வேத காலங்களில், திருக்கொடிமாடச் செங்குன்றூர் என அழைக்கப்பட்டது) தேவாரம், சிலப்பதிகாரம் போன்ற நூல்களில் இத்தலம் பற்றிய பல்வேறு குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. சிலப்பதிகாரம் படைத்த இளங்கோவடிகள்,செங்கோடு எனத் திருச்செங்கோட்டைக் குறிப்பிடுகிறார். திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் திருக்கோயில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற கொங்கு நாட்டுத் தலங்களுள் ஒன்றாகும். மூலவர் அர்த்தநாரீசுவரர், தாயார் பாகம்பிரியாள், செங்கோட்டு வேலவர் என மூன்று தனிப் பெரும் சன்னதிகள் அமைந்துள்ளன. இத்திருக்கோயிலானது மலைக்கோயிலில் அமைந்துள்ளது. அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோயில். தரை மட்டத்திலிருந்து 650 அடி உயரத்தில் அமைந்துள்ளது. 1200 மலைப்படிக்கட்டுகள் உள்ளன. அம்மையும், அப்பனும் கலந்ததொரு திருவுருவில் அம்மையப்பனாய் இறைவன் இத்திருத்தலத்தில் எழுந்தருளி நிற்கும் சிறப்பு வேறு தலத்துக்கு இல்லாத ஒன்றாகும். இத்தலம் அமைந்துள்ள மலையினை ஒரு புறம் பார்க்கும்பொழுது...
06:00 AM IST - 02:00 PM IST | |
03:00 PM IST - 07:00 PM IST | |
02:00 PM IST - 03:00 PM IST | |
காலை 6.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 2.00 மணிக்கு நடை சாற்றப்படும்,.மதியம் 3.00 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு மாலை 7.00 மணிக்கு நடை சாற்றப்படும். அமாவாசை தினத்தில் மட்டும் காலை 5.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மாலை 7.00 மணிக்கு நடை சாற்றப்படும். (விஷேச நாட்கள் மற்றும் அமாவாசை அன்று மட்டும் மதியம் நடை சாற்றப்படுவது இல்லை) |