Screen Reader Access     A-AA+
அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோயில், மலைக்கோயில், திருச்செங்கோடு - 637211, நாமக்கல் .
Arulmigu Arthanareeswarar Temple, Hill Temple, Tiruchengode - 637211, Namakkal District [TM004890]
×
Temple History

தல வரலாறு

திருச்செங்கோடு (வேத காலங்களில், திருக்கொடிமாடச் செங்குன்றூர் என அழைக்கப்பட்டது) தேவாரம், சிலப்பதிகாரம் போன்ற நூல்களில் பல்வேறு குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. சிலப்பதிகாரம் படைத்த இளங்கோவடிகள், செங்கோடு எனத் திருச்செங்கோட்டைக் குறிப்பிடுகிறார். பிருங்கி முனிவர் மற்றும் அருணகிரிநாதர் போன்றோரின் சிலைகள் திருக்கோயிலுக்கு உள்ளே அமைந்துள்ளன. சுவர்களில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளில் இந்தப் புராதன மலைக்கோயிலானது சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது என்ற குறிப்பு இடம் பெற்றுள்ளது. இறைவன் அர்த்தநாரீசுவரர் மலைமேலிருந்து, அனைத்து மக்களுக்கும் காட்சியளித்து வருகிறார். மூலவராகிய அர்த்தநாரீசுவரர் ஆண்பாதி பெண்பாதி வடிவம் கொண்டு மாதொருபாகனாகக் காட்சியளிக்கிறார். அர்த்தநாரீசுவரராகிய இறைவனின் இந்த அரிய காட்சி உலகத்தில் இந்தத் திருக்கோயிலில் மட்டுமே காணமுடிகிறது.

தல பெருமை

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகரின் தென் கிழக்குப் பகுதியில் மலை மீது அமைந்துள்ள இத்திருத்தலம் அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோயில் என்றழைக்கப்படுகிறது. கொங்கு நாட்டின் பாடல்பெற்ற ஏழு தலங்களுள் இத்திருக்கோயிலும் ஒன்றாகும். இத்தலமானது இலக்கியங்களில் திருக்கொடிமாடச் செங்குன்றூர் என்று சிறப்பாக அழைக்கப்படுகிறது. இத்திருக்கோயில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாக அறியப்பட்டாலும், எந்தக் காலக்கட்டத்தில் என்பதை உறுதிப்படுத்துவதற்கான சான்றுகள் கிடைக்கப் பெறவில்லை. அருள்மிகு அர்த்தநாரீசுவரர், அருள்மிகு செங்கோட்டு வேலவர், அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் ஆகிய மூவருமும் மூர்த்திகளாக இத்திருக்கோயிலில் எழுந்தருளியுள்ளனர். கருவறையில் சிவனும் (வலதுபுறம்), சக்தியும் (இடதுபுறம்) சேர்ந்த ஒரே உருவாய், மாதொரு பாகனாய் அர்த்தநாரீசுவரர் எழுந்தருளி இருப்பது இத்திருக்கோயிலின் தனிச் சிறப்பாகும். கருவறையில் குடி கொண்டுள்ள அருள்மிகு அர்த்தநாரீசுவரர் ஒரு வகைப் பாசானத்தால் உருவானதாகக்...

இலக்கிய பின்புலம்

திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற திருத்தலங்களுள் இத்திருத்தலமும் ஒன்றாகும். இத்திருத்தலத்தின் மலையானது சிவந்த நிறமாகக் காணப்படுவதால், செங்கோடு (செம்மை கோடு) - (கோடு என்பதற்கு மலை என்று பொருள்) என்று பெயர் பெற்றது. தெய்வத் திருமலை, நாகமலை, உரசகிரி எனப் பல பெயர்களும் இத்திருத்தலத்திற்கு உள்ளன. மலைக்கோயிலில் குடி கொண்டுள்ள அருள்மிகு அர்த்தநாரீசுவரரைக் பாதசாரியாக நடந்து காணவிரும்பும் பக்தர்களுக்காக அடிவாரப் பகுதியிலிருந்து மலைக்கோயில் வரை 1200 படிக்கட்டுகள் உள்ளன. இப்படிகளில் உள்ள 60 ஆம் படியானது மிகப் புரதானமானதாகக் கருதப்படுகிறது. இப்படிக்கட்டின் மேல் நின்று சத்தியம் செய்தால் அது நீதிமன்றத்திலும் ஏற்றுக் கொள்ளப்படும் என்று நீண்டகாலமாக நம்பப்படுகிறது. மேலும் இறைவி சிவபெருமானோடு இரண்டற இணைய வேண்டும் என்பதற்காகக், கேதார கௌரி என்னும்...

புராண பின்புலம்

சிவத்தலமும், திருமால் தலமும் ஒன்றாய் அமைந்தும் விளங்கும் இத்திருத்தலமானது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றுச் சிறப்புடையது. மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற முச்சிறப்புகளாலும் பெருமையுடையது இத்தலம். முன்னொரு காலத்தில் ஆதிசேடனும் வாயுதேவனும் தங்களில் யார் பெரியவர் என்பதை அறிய இருவரும் போர் செய்தனர். இப்போரினால் உலகில் பேரழிவுகளும், துன்பங்களும் நேரிடுவதைக் கண்ட முனிவர்களும், தேவர்களும் அவர்களிடம் யார் பெரியவர் என்பதை அறிய ஒரு வழிக் கூறி அதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களே பெரியவர் என்றனர். இதன்படி ஆதிசேடன் படமெடுத்து மேரு சிகரத்தின் முடியை அழுத்திக் கொள்ளவேண்டும். வாயுதேவன் தன் பலத்தால் பிடியைத் தளர்த்த வேண்டும் என்றும் கூறினர். ஆனால் வாயுதேவனால் பிடியைத் தளர்த்த முடியவில்லை. இதனால் கோபம் கொண்ட வாயுதேவன் தன்...